சுந்தரம் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வு!
திருப்பத்தூர், ஜூன் 6 -
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜீன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.ராமசாமி அவர்கள் தலைமை யில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திரு சீனிவாசன் மற்றும்.உதவி தலைமை ஆசிரியர் திரு அன்பழகன், தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர்
ஹேமலதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ராசாத்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக