பந்தலூர் கல்லட்டி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயலாளர் இந்திரஜித் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர்
ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு கல்லட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு போதிய நடைபாதை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பந்தலூர் - பாட்டவயல் செல்லும் சாலையில் இருந்து புட்டுராஜ் வீடு முதல் ராஜம்மாள் மற்றும் சந்திரசேகர் வீடு வரை உள்ள நடைபாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பழைய காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் மக்களால் கற்கள் கொண்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த சாலையும் கற்கள் உடைந்து சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலையில் பொதுமக்கள் மழைக்காலங்களில் செல்லும்போது வழுக்கி விழுந்து அடிப்படும் நிலையில் உள்ளது. மளிகை பொருட்கள் வாங்கி செல்லவும் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு வந்து செல்லவும் மிகவும் சிரமமான நிலையே உள்ளது. இந்த பகுதியில் இறந்தவர்களை அந்த பகுதியில் இருந்து தூக்கி வரவும் இயலாமல் மிகவும் சிரம்மபடும் நிலையே உள்ளது. எனவே இந்த பகுதியில் நகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொண்டு இந்த சாலையை சீரமைத்து சிமெண்ட் நடைபதையாக மாற்றி தர வேண்டும் இவ்வாறு இந்திரஜித் அந்த மனுவில் கூறியுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக