வாகன ஓட்டிகளை விபத்துக்கு உள்ளாக்கும் சாலையில் உள்ள குழிகள்
பந்தலூர் பாட்டவயல் சாலையில் மேங்கோரஞ் பகுதியில் சாலையில் ஏற்பட்ட சிறு குழி வாகனங்கள் சென்று தற்போது பெரிய குழியாக மாறிவிட்டது. இந்த குழியை முறையாக செப்பணிடாமல் விட்டதால் தற்போது மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் வருவோர் குழி இருப்பதை அறியாமல் எமார்ந்து விபத்தில் சிக்குகின்றனர். அதுபோல ஆட்டோ மற்றும் தனியார் ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் குழியில் செல்லும் போது பழுதாகி விடுகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் இந்த குழியை தற்காலிகமாக பராமரிப்பு பணி பேட்ஜ் ஒர்க் செய்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக