நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர்படை அணி எண் 158 செயல்பட்டு வருகிறது. 9 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி திருநெல்வேலி கமாண்டிங் அதிகாரி கர்னல் டி ஆர் டி சின்ஹா உத்தரவின்பேரில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான உடல்திறன் தகுதித்தேர்வு நடைபெற்றது.
ஜூனியர் கமிஷன் அதிகாரி சுபைதார் சுந்தரபாண்டி, கம்பெனி ஹவில்தார் மேஜர் சதிஸ்குமார், ஹவில்தார் சுராஜ், சுந்தர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் நடத்தினர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர் ஆலோசனையின்படி தலைமையாசிரியர் குணசீலராஜ் தலை மையில் என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக