தமிழக குரல் செய்தியின் எதிரொலியாக மக்கள் கோரிக்கை நிறைவேற்றம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

தமிழக குரல் செய்தியின் எதிரொலியாக மக்கள் கோரிக்கை நிறைவேற்றம்

 


உதகை எட்டின் சாலையில் சரியாக மூடப்படாமல் உள்ள கழிவு நீர் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் உதகை ஏடிசி முதல் மத்திய பேருந்து நிலையம் வரை உள்ள எட்டின்ஸ் சாலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் கோவை செல்லும் முக்கியசாலையாகும் முக்கிய சாலை ஆகும் இந்த சாலையில் சரியாக மூடப்படாமல் உள்ள கழிவு நீர் தொட்டியால் போக்குவரத்து இடையூறும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை தமிழக குரல் செய்தியாளர் திரு ராஜேஷ் அவர்கள் செய்தியாக வெளியிட்டு இருந்தார்


 இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இந்த சாலையின் நடுவில் உள்ள பாதாள சாக்கடை குழியினை சீர் செய்துள்ளனர் இதனால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக குரல் செய்தி குடும்பத்திற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்தனர் 


உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறையினருக்கும் பணியாளர்களுக்கும் தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர்  ராஜேஷ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad