தொடர் மழையிலும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை காவலர்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

தொடர் மழையிலும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை காவலர்கள்


நீலகிரி மாவட்டம் உதகைக்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முகப்பு பகுதியில் அமைந்துள்ள சேரிங்கிரஸ் என்ற இடம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக திகழ்கிறது இவ்விடத்தில் பாரத் பெட்ரோலியம் என்ற பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது இப்பகுதியில் சுமார் ஒரு மாத காலமாக மழையின் காரணமாகவும் அப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல்களின் கழிவுநீர் வழிந்தோடு கொண்டிருக்கிறது எனவே அப்பகுதியில் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு  உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பள்ளி மாணவ மாணவிகள் முகம் சுளித்தவரே நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.  இத்தகவலை நகராட்சி ஆணையாளர்களுக்கு பொதுமக்கள் புகாராக அனுப்பி வைத்தனர். இப்ப புகாரை ஏற்று இன்று 17-062025   நகராட்சி ஊழியர்களால் மழை என்றும் பாராமல் சீரமைத்து கொடுத்தார்கள்.  நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் வினோத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad