ராமநாதபுரம் உங்கள் ஊரில் உங்கள் SP,. பொது மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடல், - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

ராமநாதபுரம் உங்கள் ஊரில் உங்கள் SP,. பொது மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடல்,

ராமநாதபுரம் உங்கள் ஊரில் உங்கள் SP,. பொது மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடல்,

இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,IPS., 12.06.2025 அன்று சாயல்குடிஅருகேயுள்ள கடுகுச்சந்தை கிராமத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, அக்கிராம பகுதிகளில் நிலவும் சமூக சூழ்நிலை, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் குறைகளை கவனமாக கேட்டு, அவற்றின் தீர்வுக்கான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்து,சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டு ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் மாணவிகளுக்கு வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad