ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க கோரி மனு செய்துள்ள மனுதாரர்களுக்கு வயது தளர்வு தளர்த்தி மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்குவதற்கான குழு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலான், தலைமையில் மருத்துவ குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. 

இன்றைய தினம் நடைபெற்ற இம் முகாமில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர், காதுகேளாதோர், கண்பார்வையற்றோர் பங்கேற்றனர். மருத்துவர் குழுவை சார்ந்த மருத்துவர்கள் அவர்களை ஆய்வு, மேற்கொண்டதுடன் இக்குழுவானது 32 நபர்களுக்கு வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கு பரிந்துரை செய்தது 

இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்திட்ட தனி துணை ஆட்சியர் விஷ்ணு குமாரி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம் எலும்பு முறிவு மருத்துவர் அழகு கார்த்திகேயன் காது மற்றும் மூக்கு தொண்டை மருத்துவர் அருண்ராஜ் கண் மருத்துவர் ஆனந்த் மனநல மருத்துவர் பாரதி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad