ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் உள்ளூர் மக்களுக்கு என்று இருந்த தரிசன சிறப்பு பொது பாதையை அடைத்து 200 ரூபாய் செலுத்தி கட்டண வரிசையில் செல்லும் வழியில் உள்ளூர் மக்களை அனுமதிக்க செய்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறை மற்றும் அமைச்சர் சேகர் பாபு வை கண்டித்து உள்ளுர் பொதுமக்கள் இராமநாதசுவாமி கோயில் அருகே தர்ணா போராட்டம் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் பொதுமக்கள் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. உள்ளூர் பொதுமக்களை மீண்டும் கோயிலில் தரிசனம் செய்ய பழைய நடைமுறையை அனுமதிக்க கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு கொடுக்கபட்டது.இதனையடுத்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்,.
மாவட்ட ஆட்சித்தலைவர், சிம்ரன்ஜீத் சிங் கலோன்,,ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து இராமேஸ்வரம் பொதுமக்கள் பெரும் திரலாக திரண்டு வந்து கோவிலின் பிரதான சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர், கைது செய்து அழைத்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக