தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் ராமநாதன் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் தோழர் சத்யகிரி தோழர் முனியராஜ் தோழர் ஜீவா மாவட்ட இணை செயலாளர் தோழர் வைரவ முருகன் தோழர் மன்சூர் அலி தோழர் அருள் முடியப்பதாஸ் தோழர் சாரதி தணிக்கையாளர்தோழர் திருமுருகன் திருவாடனை தோழர் முருகேசன் ஆர் எஸ் மங்கலம் தோழர் கருப்பையா தோழர் சுதாகர் ஆகியோர் பங்கெடுப்புடன் நடைபெற்றது தோழர் செல்வகுமார்அ சிறப்புரை ஆற்றினார் இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இளநிலை உதவியாளர இருந்து உதவியாளர் நிலையில் பதவி உயர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது சமீபத்தில் வழங்கப்பட்ட ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பணியிட மாறுதல் ஒரு சில குறைகளை தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட தொலைதூரம் பயணிக்கும் அலுவலர்கள் பணியிடங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. லஞ்ச ஊழல் தடுப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பிற மாவட்டங்கள் போல விரைவாக பணியிடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்ட. பொது நிதியில் ஊதியம் வழங்கும் ஊழியர்களுக்கு குறைந்தது மூன்று மாத ஊதியங்களை தனி கணக்கு ஆரம்பித்து வரவு வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அலுவலக உதவியாளர்கள் இரவு காவலர்கள் ஓட்டுநர்கள் மற்றும்சத்துணவு காலி பணியிடங்களை நிரப்புதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அலுவலக பணிகளில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.ஏழாவது ஊதிய கமிஷன் பெற்றுத்தந்த ஐயா எம்எஸ் வழியில் ஊழியர் நலன் காத்து எந்த ஊழியரும் பாதிக்கப்பட்டால் உடனடி அமைப்பு தலையீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இரவு பகல் பாராது நடந்து முடிந்த மாநில மாநாட்டை இரண்டு தினங்கள் சிறப்பாக நடத்திய நடத்த உதவிய அலுவலக உதவியாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாநில மாநாட்டில் நடந்த குளறுபடிகளை அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களால் ஊழியர்கள அவமானம் அடைந்ததை தோழர்கள் பேசினர் மேலும் ஊழியர் நலம் சார்ந்த கோரிக்கை தொடர்பாக மாலை ( 17.06.2025) ஆறு மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களை சந்திப்பது பணி அழுத்தம் தொடர்பாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் ஆகியோரை சந்திப்பது என தீர்மானம் இயற்றப்பட்டது கலந்து கொள்ளாத மாவட்ட நிர்வாகிகளும் நாளை கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக