திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா - முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா - முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் 
ஆலோசனைக் கூட்டம். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அரசு விருந்தினர் மாளிகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 

நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு,இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு. கிரண்குர்லா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று (17.06.2025), ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் தகே.என்.நேரு அவர்கள் தெரிவித்த்தாவது :-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான யாக கால பூஜை 01.07.2025 அன்று நடைபெறவுள்ளது. 

திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை புரியும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு துறைகளின் மூலமாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் நாள்தோறும் வருகைபுரிவதாலும், மேலும், விரைவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளதாலும், பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வசதிக்காகவும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து இன்றையதினம் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ள தற்காலிக வாகன நிறுத்தமிடங்கள் மற்றும் வருங்காலங்களில் நிரந்தரமாக வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 
அதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாகவும், போக்குவரத்து வசதிக்காகவும் வீரபாண்டியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே. நகர் பகுதியில் தற்காலிக வாகனம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும், பக்தர்கள் மேற்படி தற்காலிக பேருந்து மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மிகைநீர் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. எனவே, மரப்பாலம் அமைப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பக்தர்களின் வசதிக்காக சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார். 

இந்நிகழ்வின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், இ..ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, இ.ஆ.ப., திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் நகர்மன்றத் துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், நகராட்சி ஆணையாளர்கள் கண்மணி (திருச்செந்தூர்), குமார்சிங் (காயல்பட்டினம்), திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், உள்ளாட்சி பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad