காட்பாடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் சாலை மறியல்!
காட்பாடி , ஜூன் 15 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி அப்பகுதி யைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களு டன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல றிந்த காட்பாடி போலீசார் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, பொதுமக்களிடம் விரைவில் குடிநீர் வழங்கப்படும் எனத் தெரிவித்து போராட்டத்தை கலைத்தனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக