பந்தலூர் அருகே அய்யன்கொல்லி சென்தாமஸ் மேல்நிலைப் பள்ளியில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு நடைபெற்றது.
பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு பள்ளி தாளாளர் அயரின் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் லீனா முன்னிலை வகித்தார்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை சவிதா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி துறை தலைவர் முனைவர் அசோக்குமார் பேசும்போது முன்பு இருந்த கல்வி கற்க இருந்த தடைகள் அனைத்தும் தற்போதைய காலகட்டங்களில் உடைக்கப்பட்டு அனைவரும் கல்லூரி கல்வி வரை படிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனது பெற்றோர்கள் கூலி வேலை செய்த போதும் என்னை நன்றாக படிக்க வைத்தனர். அதுபோல என்னுடைய முயற்சியால் நன்கு படித்து உயர்கல்வியை முடித்தேன். மேலும் பல்வேறு இடங்களில் உதவிகள் பெற்று தொடர்ந்து படித்து தற்போது ஆராய்ச்சி துறையில் துறை தலைவராகவும், பல்வேறு வெளிநாடுகளில் கௌரவ பேராசிரியராகவும் சென்று வருகின்றேன். இதற்கு முக்கிய காரணம் கல்வி ஆகும். எனவே மாணவர்கள் படிக்கும் பருவத்தில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து படிப்பதன் மூலம் தங்களுடைய வாழ்வை மேம்பட முடியும். படிக்கும் காலங்களில் நேரத்தை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்திக் கொண்டு படிப்பில் மட்டுமே தங்களுடைய முக்கியத்துவத்தை கொடுத்து வெற்றி பெற வேண்டும். நல்ல மதிப்பெண்கள் பல்வேறு இடங்களில் உங்களுக்கு கல்விக்கான உதவிதொகைகளை பெற்று தரும். ஆராய்ச்சி படிப்புகளுக்கும் அரசின் மூலமும், இதர அமைப்புகள் மூலமும் ஸ்காலர்ஷிப்/ பெல்லோசிஃப் ஆகியன வழங்கி வருகின்றன. முதுநிலை அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றபின் பல்கலை கழகங்கள் நடத்தும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு சேரலாம். நீங்கள் தேர்வு செய்யும் பாடத்திற்கு தகுந்த வழிகாட்டியாக பல்கலைகழக பேராசிரியர்களை தேர்வு செய்து கொண்டு ஆராய்ச்சி யாளர்களாக மாறவேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய நிலையில் உள்ளதால் மாணவர்கள் கல்விக்கான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அதிகாலையில் முன்கூட்டியே எழுந்து படிப்க்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதும், ஆசிரியர்கள் பாடம் நடத்துபோது சந்தேகங்கள் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதும், வீட்டு பாடங்களை அன்றன்று செய்து கொள்வதும் கல்வியை புரிந்து படிப்பதற்கு உதவியாக அமையும். புரிந்து அறிந்து, தெளிந்து படிப்பதன் மூலம் மட்டுமே வெற்றியாளராக திகழ முடியும். பாட அறிவோடு செய்தித்தாள் வாசிப்பது, கணினி மற்றும் மொழி அறிவுகள் உள்ளிட்ட இதர திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம். இதனால் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றி கொள்ள முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் 1000 த்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக