வீராணம் ஏரியின் பூதங்குடி வி என் எஸ் எஸ் மதகின் ஷட்டர் பழுதை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

வீராணம் ஏரியின் பூதங்குடி வி என் எஸ் எஸ் மதகின் ஷட்டர் பழுதை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு தோப்பு அருகே வீராணம் ஏரியின் பூதங்குடி விஎன்எஸ்எஸ் மதகு அமைந்துள்ளது.முக்கிய நீர் வெளியேற்றும் இந்த மதகின் மூலம் வெளியேற்றப்படும் ஏரி நீரானது சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு சென்று சேரவும்  உபரிநீரை வெளியேற்ற வும் பயன்பட்டுவருகிறது.இவ்வாறான சூழலில் இந்த விஎன் எஸ் எஸ் மதகின் மூன்று ஷட்டர்களில்நடு ஷட்டர் மேலே தூக்கும் பேரிங்கில் பழுது ஏற்பட்டுள்ளதால் அது கடந்த சில மாதங்களாக  சரி செய்யப்படாமல் இரண்டு செட்டர்கள் மூலமாகவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறதாக  இப்பகுதியின் விவசாயிகள் கூறுகின்றனர். நடுவில் உள்ள ஷட்டரின் பழுதை உடனடியாக சரி செய்து மூன்று ஷட்டர்களையும்  எந்நேரமும் திறப்பதற்கும் மூடுவதற்கும் சரியான நிலையில் வைத்திருக்குமாறுஇப்பகுதி விவசாயிகள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு
கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad