இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பக்ரீத் எனும் தியாகத் திருநாள் இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத்தூதர் இப்ராஹிம் தனது மகனை கடவுளுக்காக பலி கொடுக்கும் நிகழ்வு இறைவனுக்காக அனைவரும் நன்றி உள்ளவர்களாக தியாகம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என குடும்பமாக புத்தாடைகளை உடுத்தி உற்சாகமாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த சிறப்பு தொழுகையில் மாவட்ட மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மாநில இளைஞர் அணி பொருளாளர் ரியாகர் ரகுமான், மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் பெஸ்ட் ரசூல் மாவட்ட துணை செயலாளர் காஜா, ஊடக அணி செயலாளர் சையது அப்துல் காதர் வர்த்தக அணி செயலாளர் சேக் மதார், சுற்றுச்சூழல் அணி செயலாளர் அப்துல் கபூர் மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ராஜா முகமது மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் குதாமுகமது, மேலப்பாளையம் பகுதி தலைவர் யூசுப் சுல்தான் பகுதி செயலாளர்கள் பாதுஷா அப்துல் காதர் பொருளாளர் அசன் மைதீன் மாவட்ட பகுதி வார்டு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக