ஸ்ரீமுஷ்ணம் அருகே 5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் கடைகளில் வீடுகளில் பதுக்கி விற்பனை செய்த நான்கு பேர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

ஸ்ரீமுஷ்ணம் அருகே 5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் கடைகளில் வீடுகளில் பதுக்கி விற்பனை செய்த நான்கு பேர் கைது

 


ஸ்ரீமுஷ்ணம் அருகே 5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் கடைகளில் வீடுகளில் பதுக்கி விற்பனை செய்த நான்கு பேர் கைது 


ஸ்ரீமுஷ்ணம் ஜூன் 08 கடலூர் மாவட்டம்  ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரம், வட்டத்தூர், நந்தீஸ்வரமங்கலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர் அப்போது மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட ஐந்து கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சோழத் தரம் பகுதியில் காவல் நிலையம் இருக்கும் 500 மீட்டர் தூரத்திலேயே ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

மேலும் இது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சோதனைகள் தீவிர படுத்தப்பட்டால் மேற்கண்ட பகுதிகளில் ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும், வெளியிடங்களில் இருந்து விற்பனை செய்யப்படும் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட பின்பு போலீசார் சோதனை என்ற பெயரில் கைது செய்வது நம்புகின்ற படியாக இல்லை எனவும், சிறு சிறு வியாபாரிகளை தேடித்தேடி போய் கைது செய்யும் காவல்துறையினர் மொத்த விற்பனையாளர்கள் மீது கை வைக்காதது ஏன் எனவும் பலரும் வேதனையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad