கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக, காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் முயற்சியில் வெற்றிப்பாதை என்னும் தலைப்பில் உதவி காவல் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் நடத்தப்படுகின்றன ஆறாவது பயிற்சி தேர்வு வரும் 08.06.2025 காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படையில் வைத்து மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்ள இந்த போஸ்டரில் உள்ள QR கோடு மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9.00 மணிக்கு ஆயுதப்படையில் ஆஜராக வேண்டும்.
இத்தேர்வில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்கள் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக