குடியாத்தத்தில் முறையான குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
குடியாத்தம் , ஜூன் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலம்நேர் சாலை பிச்சனூர் பேட்டை ஆனைகட்டி முதலி தெரு தியாகி குமரன் தெரு தலை யாரி முனுசாமி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு முறையாக
குடிநீர் விநியோகம் செய்யவில்லைஎன்று கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலி குடங்களுடன் திடீரென்று சாலை மறியல் ஈடுபட்டனர் தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர போலீசார் மற்றும் நகராட்சி ஆணையாளர் மங்கை யர்க்கரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் செ ன்று. பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்களிடம் முறையாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலை ந்து. சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக