திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த
அலங்கியம் ஊராட்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர், இங்கு ஜூன் 22 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாள் விழா முன்னிட்டு தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில்,
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து முறைப்படி விலகி ஷேக் பரித் அவர்கள் தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில்
தாராபுரம் கிழக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் செயலாளர் கே.கே.துரைசாமி தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
உடன் தாராபுரம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி கே.எஸ்.பரக்கத் அலி,அலங்கியம் பொதுக் கிளை பிரதிநிதி மைசூர் சாதிக் மற்றும் அலங்கியம் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு
திமுகவில் இணைந்து கொண்ட ஷேக் பரித் நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக