ஜடையம்பாளையம் பகுதியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை, ஏ கே செல்வராஜ் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி ஜடையம்பாளையம் ஊராட்சி ஜே,ஜே நகரில் ரூபாய் 2 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை .ஏ கே செல்வராஜ் ,எம் எல் ஏ நடைபெற்றது .கருப்பராயன் நகர் முதல் ஜே ஜே நகர் வரை ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் 2.0 கிலோமீட்டர் தூரத்தில் தார் சாலை, ஜடையம்பாளையம் முதல் மேத்தேபாளையம் வரை ரூபாய் 58 லட்சம் மதிப்பில் தார் சாலை, காளனூர் முதல் மேத்தோபா பாளையம் வரை ரூபாய் 48 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், பிடி கந்தசாமி ,அதிமுக நிர்வாகிகள், முன்னாள் ஒன்றிய கவுன்சில் எஸ் எஸ் கோபாலகிருஷ்ணன், ஜே டி முருகையன், ஈஸ்வரன், சம்பந்த குமார், பார்த்திபன் ,மற்றும் ஒப்பந்ததாரர்கள் ,கே பி டி கன்ஸ்ட்ரக்சன் பழனிச்சாமி, மற்றும் சத்குரு சுப்பிரமணியம், மோகன் குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக