வேலூரில், பாதாள சாக்கடையில் தவறி விழுந்த பசு மாட்டை லாவகமாக மீட்டெடுத்த தீயணைப்பு துறையினர்.
வேலூர் , ஜூன் 6 -
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, 4 மண்டலம், 33வது வார்டு க்கு உட்பட்ட நவநீதம்மன் கோவில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணி கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்பணிக்காக அவ்வப்போது ராட்சத குழி கள் தோண்டப்பட்டு மூடுவது வாடிக்கை யாக நடந்து கொண்டிருக்கிறதுஇந்நிலை யில் 05-06-2025 இரவு தோன்றி மூடப்பட்ட இடத்தில் பசுமாடு பாதாள சாக்கடை புதைக் குழிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது இதை அறிந்த அப்பகுதி மக்கள் பசுவை மீட்க முயற்சி செய்தனர்இப்பகுதி
மக்களால் முடியாத நிலையில் தீயணை ப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த னர் சமூக ஆர்வலர்களின் பேரில் தகவ லறிந்து வந்த தீயணைப்பு நிலைய (பொ) அலுவலர் முருகேசன், நிலைய மீட்பு பணி யாளர்கள் பார்த்தீபன் உடனான தீயணை ப்பு நிலைய குழுவினர், பாதாள குழியில் சிக்கித் தவித்த பசுமாட்டை லாவகமாக போராடி பசுவை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து இப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையின் தீவிர முயற்சி யில் பத்திரமாக மீட்கப்பட்டதை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக