காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! 

காட்பாடி , ஜூன் 6 -

மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்து அறிவுரை வழங்கி உறுதிமொழி ஏற்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை பொருட் கள் பயன்பாடு தடுப்பது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட  ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் (06.06.2025) பள்ளி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி யை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் முதன்மை கல்வி அலுவலர் (பொ) தயாளன், மனநல மருத்துவர்மரு.சிவாஜி. போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார் ஆய்வாளர் சீனிவாசன், விழிப்புணர்வு கண்காணிப்பு பார்வையாளர்சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர் தாரகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியர் பாபு மற்றும் ஆசிரிய பெரு மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad