அரக்கோணத்தில் நடைபெற்ற போலீஸ் பொதுமக்கள் கண்ணொளி மற்றும் எஸ். என். ஆர். பாராட்டு விழா!
ராணிப்பேட்டை , ஜூன் 6 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டையில் போலீஸ் பொது மக்கள் கண்ணொளி திட்ட ஒருங்கிணை ப்பாளர் டாக்டர். எஸ்.என்.ஆர் பாராட்டு விழா! நடைபெற்றது. போலீஸ் பொது மக்கள் கண்ணொளி திட்ட தலைவர். ஐ.பி.எஸ். சிவக்குமார் நல்லாசியுடன் நடந்த பாராட்டு விழாவில் ஏழைகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்ட்டன மேலும் 30 பேர் தங்கள் கண்களை தானமாக வழங்க முன் வந்த னர். விழாவிற்கு டாக்டர்.எஸ். என் .ஆர். தலைமை தாங்கினார். முத்துலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக அறம் அறக்கட்டளை தலைவர் முனைவர். கலைநேசன் தேசிய மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர். ஏ. தங்க மணி, நகர மன்ற உறுப்பினர். ஜெயபால் மற்றும் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர். காந்திராஜ் ஆகியோருடன் ஈ .கே. ஆர். வின்சென்ட், அம்மனுர் பால்ராஜ் கலந்து கொண்டனர். மேலும் ஆதரிக்கும் கரங்கள் அறக்கட்டளை குழுவினர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களில் சாம்சன். ஜெயக்குமார், கௌரி, கஜேந்திரன், டாக்டர். கார்த்திக் ஈடுபட்ட னர். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக