கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்டாலின் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக
போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ்,சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும்,18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்ககூடாது எனவும்
இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது பெற்றோர்களும் குழந்தைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..
இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் பங்கு தந்தை . யுபால்டு மரியதாசன் ஊர் தலைவர்.டாலன் டியோட்டா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக