சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கு காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக முதல்வர்(மு.கூ.பொ) முனைவர் நிலோபர் பேகம் அறிவிப்பு.
காரைக்குடி , அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 20-06-2025 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல்(பி.சி.ஏ), பி.எஸ்.சி.புவி அமைப்பியல் வணிகவியல்(பி.காம்.), தொழில் நிர்வாகவியல்(பி.பி.ஏ.), பி.ஏ. வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டப் பொதுக்கலந்தாய்வு நடைபெறும். இக்கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், இணைய வழியில் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ், தொலைபேசி எண் மற்றும் பிறந்த நாளுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மாணவ, மாணவியர் பெயரிலான வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,, நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்துப் பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டினையும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக