ஆத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திமுக வழக்கறிஞர் அணி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா ஆத்தங்குடி கிராமத்தை சேர்ந்த கே. கருப்பையா என்ற அரசு பள்ளி மாணவன் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 549 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற போது தனது தந்தை மரணம் அடைந்த போதிலும் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்வெழுதி பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாணவனை பாராட்டு விதமாக திமுக வழக்கறிஞர் அணி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக வழக்கறிஞர் திரு மணிவண்ணன் அவர்களின் தலைமையில் வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்து, சால்வை அணிவித்தும், பதக்கம் அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வின்போது மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக