திருப்புவனம் அருகில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகள் 70% நிறைவடைந்த நிலையில், துணை முதல்வர் ஆய்வு.
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மதுரை மண்டலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கானூர் கண்மாய், பழையனூர் கன்மாய் மற்றும் இதர 17 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு அணைக்கட்டு கட்டும் கட்டுமான பணியானது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டு 420 மீட்டர் நீளத்திற்கு சுமார் 40.27 கோடி மதிப்பீட்டில் பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்குறிப்பிட்ட அணைக்கட்டு மூலமாக 26 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 6975.53 ஏக்கர் பாசன பரப்பளவும், 18 ஊராட்சிகள், 225 கிணறுகள் மற்றும் 30 ஆயிரம் நபர்களுக்கு மேலாக பயன்பெறும் வகையில் அணைக்கட்டானது கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வருகை புரிந்த போது, நடைபெற்று வரும் அணைக்கட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் தற்போது 70% அணைக்கட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பணிகள் நிறைவடைந்து அணைக்கட்டானது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மாவட்டத் துணைத் செயளாலர் சேங்கைமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கச்சேரி சி. ஆர். சுந்தரராஜன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக