தங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துதர துணை முதல்வரிடம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கோரிக்கை.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் வருகை புரிந்துள்ள தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களை முன்னிலையில் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு கலைக்கல்லூரி அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வரவேற்ற திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். மேலும் பள்ளி மாணவிகள் தங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கையும் முன்வைத்தனர். இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மாவட்டத் துணைத் செயளாலர் சேங்கைமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கச்சேரி சி. ஆர். சுந்தரராஜன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்புவனம் அருகில் கட்டப்பட்ட வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகளை துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக