திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் ஜூன் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலி திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் குரு பட்டம் பெற்ற அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினர். புதிதாக குரு பட்டம் பெற்று வருகை புரிந்த அருட் தந்தையர்களுக்கு திருத்தலா அதிபர் சில்வெஸ்டர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இதில் அருட்தந்தையர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் மதிய அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர் மற்றும் திருத்தல நிதி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
.தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக