விருத்தாசலம் நகரத்தில் உள்ள புறவழி இணைப்பு மேடும், பள்ளமாக சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

விருத்தாசலம் நகரத்தில் உள்ள புறவழி இணைப்பு மேடும், பள்ளமாக சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


விருத்தாசலம் நகரத்தில் உள்ள புறவழி இணைப்பு மேடும், பள்ளமாக சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  நகரத்திற்குள் கனரக வாகனங்கள் வராமல் இருப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நகரத்தை சுற்றி புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையிலிருந்து வரக்கூடிய வாகனங்கள், நகரத்திற்குள் வராமல்,  ரயில் நிலையம் வழியாக சேலம் செல்வதற்காக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டது. அவ்வாறு செல்லும் இணைப்பு சாலையை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போதிய பராமரிப்பு செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டதினால், தற்போது இணைப்பு சாலை முற்றிலுமாக மேடும்,  பள்ளம்  உருவாகி உள்வாங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள் ஆகின்றனர்.


மேலும் சாலை முழுவதும் மேடும்,  பள்ளமாக இருப்பதினால், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அலசல் ஏற்பட்டு வாகனம் தாறுமாறாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உள்வாங்கி இருக்கும் இணைப்புச் சாலையை, சரி செய்யும் வகையில், புதிதாக அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக விருதாச்சலம் செய்தியாளர் அலோசியஸ் தேவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad