கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சை வாழியம்மன் திருக்கோவில் உள்ளது, இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை திருக்கல்யாணம், தொடர்ந்து காலை 10 மணிக்கு அக்னி மூட்டுதலும், மாலை மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். ஆபத்தாரணபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக