வடலூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை மற்றும் பேரணி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

வடலூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை மற்றும் பேரணி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் ஜமாத்துக்கு சொந்தமான ஈத் கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

 
தொடர்ந்து உலக அமைதி வேண்டியும், சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கவும், இந்திய அரசியலமைப்பு சட்டதை பாதுகாக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரணியாக சென்றனர்.


தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்தவாறு ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர், நிகழ்வில் வடலூர் ஜமாத் செயலாளர் சையத் அப்தஹிர், அப்துல் ஹமீத், முத்தவல்லி ஜமால் மொய்தீன், பொருளாளர் பஷீர் அகமத், கேப்டன் ஜாகிர் உசேன், ஆசிப்அலி, தலைவர் சல்மான், ரியாஸ் அஹமத், கவுன்சிலர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad