சொத்து பிரச்சனை காரணமாக தாய் மகனை தாக்கிய உறவினர் நடவடிக்கை எடுக்க கோரி!
திருப்பத்தூர் , ஜூன் 7 -
பா.முத்தம்பட்டி பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக தாய் மகனை தாக்கிய உறவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! தாய் மகன் மருத்துவமனையில் அனுமதி
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் அடுத்த பா. முத்தம்பட்டி பகுதியில் சேர்ந்த ராஜாமணிக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் கோனேரிகுப்பம் அடுத்த சமத்துவபுரத்தில் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் ராஜாமணி இறந்த நிலையில் அவரது மகன் வேலன் தன் தந்தைக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தில் வீடு
கட்டுவதற்காக சென்று உள்ளார்
அப்பொழுது வேலனுடைய பெரியப்பா கணேசன் மற்றும் அவரது மனைவி செல்வி மகன் பரத் ஆகிய மூவரும்
வேலன் அவரது தாய் ஜெயசீலா இருவரையும் கட்டையால் தாக்கியதாக வும் கூறப்படுகிறது இதன் காரணமாக பலத்த காயமடைந்த வேலன் மற்றும் ஜெயசீலா ஆகிய இருவரும் திருப்பத் தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்,
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக