காட்பாடியில் இன்று உலக இரத்த கொடையாளர் தினம் - இரத்த தானம் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ், விழிப்புணர்வு பேரணி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

காட்பாடியில் இன்று உலக இரத்த கொடையாளர் தினம் - இரத்த தானம் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ், விழிப்புணர்வு பேரணி!

காட்பாடியில் இன்று உலக இரத்த கொடையாளர் தினம் - இரத்த தானம், செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ், விழிப்புணர்வு பேரணி!
காட்பாடி , ஜூன் 14 -

வேலூர் மாவட்டம் காட்பாடி உலக இரத் தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு வேலூர் இரத்த மையமும், இந்தியன் ரெட் கிராஸ் சங்க காட்பாடி கிளையும்,  அனை த்து ஆட்டோ ஓட்டுநர் சங்கமும், அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்துஇரத் ததான விழிப்புணர்வு பேரணி காட்பாடி சில்க் மில் பேருந்து நிறுத்தம் அருகிலிரு ந்து புறப்பட்டு விருதம்பட்டு பெரியார் திடல் வரை நடைபெற்றது. பின்னர் பெரி யார் திடல் வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அதிகமுறை இரத்ததானம்  செய்த ஆட்டோ ஓட்டுநர், கல்லூரி மாண வர்கள் என 20பேருக்கு சான்றிதழ் வழங்கி  பாராட்டு விழா மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகியவை 14.06.2025 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகராட்சி யின்  15வது வார்டு மாமன்ற உறுப்பினர் நித்தியகுமார் தலைமை தாங்கினார்.  வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காட்பாடி ரெட் கிராஸ் சங்க தலைவர் ஏ.செந்தில்குமார் பேரணியை தொடக்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி பேசினர். 
  இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையின் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அவை துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, 15வது வார்டு திமுக செயலாளர் நாட்டாண்மை அரிகிருஷ் ணன் வேலூர் மாநகர திமுக துணைத் செயலாளர் தேவநேசன், வேலூர் உதவும் உள்ளங்கள் சங்க தலைவர்  இரா.சந்திர சேகர்,  செயலாளர் இராமச்சந்திரன், கட்டிட தொழிலாளர் மத்திய சங்க  ராஜி மாநகர வி.தொ.க தலைவர் கங்காதரன்,   ஆர் ஐ சி டி கல்வி நிறுவனத்தின் இயக் குனர் டாக்டர் கே.எஸ்.அசரப், தலைவர் தளபதி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் எம் எம் மணி  ஆகியோர்முன்னி லை வகித்து பேசினர். பின்னர் அகமதா பாத் சர்வதேச விமான நிலையத்திலிரு ந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் நீத்தவர்களு க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad