பள்ளி சுற்றுச்சுவரை முழுமையாக கட்டி தரக்கோரி கோரிக்கை
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட குந்தா தாலுகா பகுதியை சேர்ந்த எமரால்டு அண்ணா நகர் ஊ ஒ நடுநிலைப்பள்ளியில் சுமார் 100 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றார்கள் சுற்றுச்சுவர் முழுமையாக இல்லாத காரணத்தினால் காட்டு விலங்குகள் பள்ளி நேரத்திலும் பள்ளி வளாகத்தினுள் வந்து போகிறது. இதனால் குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அச்சப்படுகிறார்கள் அது மட்டும் இன்றி பள்ளி வளாகத்திற்குள் அனைத்து தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது அதி கனரக வாகனங்களும் பள்ளி நேரத்திலும் பள்ளி வளாகத்திலும் வந்து திருப்புவதும் இந்த குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது மது பாட்டில்கள் போன்ற போதைப்பொருட்கள் பள்ளி வளாகத்தில் போடப்படுகிறது பலமுறை இது குறித்து பள்ளி சார்பிலும் பள்ளி மேலாண்மை குழு சார்பிலும் மனு அளித்தும் இதுவரை எதுவும் சரி செய்யப்படவில்லை என வேதனையாக தெரிவித்துள்ளனர் அவ்வூர்பொதுமக்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக