தமிழ்நாடு வல்கனைசிங் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

தமிழ்நாடு வல்கனைசிங் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்...

தமிழ்நாடு வல்கனைசிங் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்...


தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கத்தின் ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பரணி வல்கனைசிங் கடை அருகில் நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் கணேசன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரவி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் துரை, ஆகியோர் கலந்துகொண்டனர்.


அனைத்து பஞ்சர் கடைகாரர்களும் சங்க விலைபட்டியல் செய்வது, ஒரே சம்பளம் நிர்ணயம் செய்வது, உறுப்பினர் சேர்க்கையினை தீவிரபடுத்துவது.


அனைவரும் இன்சூரன்ஸ் செய்து கொள்வது, நலவாரியம் அமைத்தல் மற்றும் விரைவில் வல்கனைசிங் தொழிலாளர்கள் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்ய வேண்டும்,


உறுப்பினர் அனைவரும் மாநில தலைவர், மாநில செயலாளர் வழிகாட்டுதலில் செயல்படுதல், மற்றும் சங்க சந்தாவினை உரிய நேரத்தில் செலுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.


மேலும் இந்த கூட்டத்திற்கு இராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் தலைமை இராஜாராம், கவுரவத்தலைவர் ஆனந்தராஜ்,  மற்றும் மாவட்ட செயலாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஜோதி, இணைச்செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட ஆலோசகர் கேசவன் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள், கடலூர் மாவட்ட நிர்வாகிகள், வல்கனைசிங் உரிமையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad