பாளையங்கோட்டை அன்னை வேளாங்கண்ணி பல்நோக்கு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து ரத்ததான முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

பாளையங்கோட்டை அன்னை வேளாங்கண்ணி பல்நோக்கு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து ரத்ததான முகாம்.

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அன்னை வேளாங்கண்ணி பல்நோக்கு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு குருதி கொடை செய்தனர்.

உலக ரத்ததான தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி பல்நோக்கு மருத்துவமனையின் ரத்த வங்கி மற்றும் திருநெல்வேலி ரோட்டரி கிளப் டவுன் மற்றும் ஸ்டார் கிளைகள் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை இன்று நடத்தினர். இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட குருதிக்கொடை தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார்கள். இந்த முகாமின் சிறப்பம்சமாக இயற்கை பாதுகாக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை வளாகத்தில் நடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை இயக்குனர்கள் மருத்துவர்கள் ஜிஜி செல்வன், அந்தோணி ராஜ், பிரான்சிஸ் ராய் மற்றும் ரோட்டரி கிளப் திருநெல்வேலி டவுண் ஊழியர்கள் & ஸ்டார் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவில் ரத்ததான கொடையாளிகள் மற்றும் அவர்களின் சங்கத்தினருக்கு பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறைவாசிகள் மற்றும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதயநோய் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்து அனைவரும் ரத்த தானம் செய்யலாம். 
58 நாட்களுக்கு ஒரு முறை என வருடத்திற்கு ஆறு முறை ரத்த தானம் செய்ய முடியும். ரத்ததானம் செய்ய முயலும் ஒவ்வொருவருக்கும் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது அது கொடையாளிக்கும் பயனுள்ளதாக இருக்கும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே ரத்ததானம் செய்ய தகுதியானவர்கள் என மருத்துவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad