திமுக சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற புதிய உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் காரமடையில் நடந்தது!!!!
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் ஆணையின்படி திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் "ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இதன் தொடக்கமாக புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பிரத்யோக செயலின் விவரங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் ,இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர், மகளிர் அணி திமுக தொண்டர்கள், புதிய உறுப்பினர்கள் , பலரும் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக