சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட உமையாள் கலையரங்கத்தை இன்று வள்ளல் அழகப்பரின் பேரன் முனைவர் வைரவன் ராமநாதன் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் உள்ள உமையாள் கலையரங்கத்தை சீரமைத்துப் புதுப்பிக்கும் பணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியால் முன்னெடுக்கப்பட்டது.
அவரின் கோரிக்கையை ஏற்று, வள்ளல் அழகப்பரின் பேரன் முனைவர் வைரவன் ராமநாதன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய பத்து இலட்சம் ரூபாய் நிதியின் மூலம் உமையாள் கலையரங்கத்தைச் சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்து புதுப்பிக்கப்பட்ட புதுப்பொலிவுடன் கூடிய உமையாள் கலையரங்கத்தை இன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நிலோபர் பேகம் தலைமை வகிக்க, வள்ளல் அழகப்பரின் பேரனும் அழகப்பா கல்வி குழுமங்களின் தலைவருமான முனைவர் வைரவன் ராமநாதன் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தைத் திறந்து வைத்தார். மேலும் கலையரங்கத்தை சீரமைத்துப் புதுப்பித்து தந்தமைக்காக அவருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்களும், ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக