நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 120 பேர் பாரதிய ஜனதா கட்சியில் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் அட்டை பெற்று இணைந்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 120 பேர் பாரதிய ஜனதா கட்சியில் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் அட்டை பெற்று இணைந்தனர்.

நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 120 பேர் பாரதிய ஜனதா கட்சியில் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் அட்டை பெற்று இணைந்தனர்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் தொண்டர்களாக இணைய விரும்பினால் மிஸ்டுகால் கொடுத்தால் போதும் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து விடலாம். இதனை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மக்களிடம் தெரியப்படுத்தி உறுப்பினர்களை சேர்த்து கட்சியை பலப்படுத்தி வரும் பணிகளை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் முன்னெடுத்த பணியால் மாற்று கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று நெல்லை மாநகர் உடையார் பட்டியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் தங்களது செல்போன் மூலம் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக கட்சியில் இணைந்து உறுப்பினர் அட்டையும் பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டனர். 

பாரதி நகர் கட்சியின் மாவட்ட பொருளாளர் அருள் முருகேசன் வழக்கறிஞர்கள் பிரிவு மாநில செயலாளர் சிவசூர்ய நாராயணன், மற்றும் மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி, சிவசக்தி, சரவணன், பூபதி ராஜா, நெடுங்குளம் துரை மற்றும் நம்பி தலைமையில் மாற்றுக் கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

மாற்றுக் கட்சியினர் 120 பேரும், தங்களுக்கு செல்போன் மூலம் கட்சி தலைமைக்கு மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர்களாக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களது முழு விபரமும் உறுப்பினர் அட்டையில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad