தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாராபுரம் நகரம், வளையக்காரர் தெருவில் இயங்கிவரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் சொந்த செலவில் ரூ.3,00,000/- மூன்று இலட்சத்திற்கு மாணவர்கள் அமரவும், கல்வி பயிலவும் வசதியாக டெஸ்க் மற்றும் பென்ச் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை கவிதா, தாராபுரம் நகரமன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர செயலாளர் முருகானந்தம்,
தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர மன்ற உறுப்பினர்கள் சாஜிதா பானு,உமா மகேஸ்வரி,செலின் பிலோமினா,புனிதா சக்திவேல்,முத்துலட்சுமி, யூசுப், அய்யப்பன் மற்றும் சையது ரியாசுதீன் என்கிற பச்சா, மரக்கடை கணேசன், சதீஸ்குமார், ஜான்பால், அகமது பாட்ஷா,ஜெரால்டு, ராஜசேகர், கார்த்தி, ஷாஜகான்,சையத்பாட்ஷா, ஜாபர் சாதிக்,சகாபுதீன் மற்றும் கழக நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக