ஸ்ரீமுஷ்ணம் அருகே கொண்ட சமுத்திரம் கிராமத்தில் மாற்று திறனாளிகளை வாட்டி வதைக்கும் அதிகாரிகள்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கொண்ட சமுத்திரம் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தின் புது தெரு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் பலர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்ட பணிகள் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருவதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர். 50 நாள் வேலை செய்தால் கணக்கை மாற்றி எழுதி 100 நாள் வேலை செய்தாகிவிட்டது உங்களுக்கு இனிமேல் வேலை கிடையாது என 100 நாள் வேலைத்திட்ட கணக்கில் முறைகேடுகள் செய்வதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் வேலை செய்வதற்கான ஊதியத்தை வழங்காமல் குறைத்து வழங்குவதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர். முக்கியமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலயே பணி வழங்க வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை மேற்கொள்வோர் இவர்களை ஜிபிஎஸ் போட்டோ எடுப்பதற்கான சிக்னல் கிடைக்கவில்லை என இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரம் அலைய வைத்து அவர்களை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். என வேதனையோடு குறிப்பிடுகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கையானது தங்களுக்கு தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சரியாக 100 நாள் பணி வழங்க வேண்டும் தங்களை ஏமாற்றாமல் அதற்குண்டான முழுமையான ஊதியத்தையும் வழங்க வேண்டும். நாங்கள் எந்தவிதமான வாழ்வாதார பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்ற நிலையில் தங்களுக்கு இதுபோன்று கிடைக்கும் ஊதியம் மட்டுமே. தங்களை ஒருவேளை கஞ்சியாவது குடிக்க வைக்கிறது என கண்ணீரோடு தெரிவிக்கின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்திர உதவித் தொகையை நடப்பு சூழலை பார்த்து விலைவாசி ஏற்றங்களை கருத்தில் கொண்டு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்குமே மாதாந்திர உதவித் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர். 100 நாள் வேலைத்திட்ட பணி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை அதிகரித்து வழங்குவது தொடர்பாக தங்களை அலைய வைக்காமல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து எங்களின் குறைகளை கேட்டறிந்து அதன்படி எங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக