ஏலகிரி மலையில் கோடை விழாவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர்!
எ.வ.வேலு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு!
திருப்பத்தூர் , ஜூன் 29 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டி என அழைக் கப்படும் ஏலகிரிமலை உள்ளது. சுற்றுலா தளமான இந்த ஏலகிரி மலையில் வருடம் வருடம் கோடை விழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோடை விழா நடைபெற்ற நிலையில் ஆறு ஆண்டுகள் கழித்து இன்று ஒரு நாள் மட்டும் கோடை விழா நடைபெற உள்ளது.இந்த கோடை விழா வை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ,சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.அதற்கு முன்ன தாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு மற்றும் சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோருக்கு மயிலாட்டம், கோலாட்டம், மற்றும் மேளதாளம் முழங்க அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் கோடை விழாவில் பொது மக்களின் பார்வைக்காக அமைக்கப் பட்டிருந்த அனைத்து இடங்களையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளருமான
தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா. மாவட்ட சேர்மன் என். கே. ஆர் சூரிய குமார் ஏலகிரி மலை. ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன். திருப் பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். ஜோலார்பேட்டை சேர்மன் காவியா விக்டர். ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ். ஜோலார்பேட்டை ஒன்றிய கவிதா உமா எஸ் கே மாவட்டத் துணைச் டி கே திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன். சிந்துஜா ஜெகன். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் தட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன். துறை சார்ந்த அதிகாரி கள் பலரும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக