வாகன ஓட்டிகளே கற்களை போட்டு பொறுப்புடன் சீரமைத்த சம்பவம் வைரல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

வாகன ஓட்டிகளே கற்களை போட்டு பொறுப்புடன் சீரமைத்த சம்பவம் வைரல்

 


நமக்குநாமே கூடலூரில் குண்டும் குழியுமான சாலைகளை வாகன ஓட்டிகளே கற்களை போட்டு பொறுப்புடன் சீரமைத்த சம்பவம் வைரல்


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் குண்டும் குழியுமான மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்ட சாலைகள்  தற்போது வாகன ஓட்டிகளே கற்களை போட்டு பொறுப்புடன் சீரமைத்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


பல மாதங்களாக சாலையில் பெரும் குழிகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வந்தனர். இடையிடையே, இரண்டு சக்கர வாகனங்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது


 • பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு

 • நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் அவசர சேவைகள் தாமதமாகிறது

 

கூடலூர் பகுதியில் உள்ள பல முக்கிய சாலைகள் தற்போது வாகன ஓட்டிகள் பயம் கொண்டே பயணம் செய்யும் அளவுக்கு குண்டும் குழியுமாக மாறியுள்ளன. முக்கியமாக நகரை சுற்றியுள்ள வர்த்தக சாலைகள், பஸ்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர சேவைகள் இயக்கப்படும் பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளது.


சாலையின்  இந்தநிலைமையால் , வாகன ஓட்டிகள் பார்த்து  பார்த்தே ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழிகளை தவிர்க்கும் முயற்சியில் பல விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இரவில் த ஒளி குறைவாக இருக்கும்போது குழிகளை முந்த முடியாமல் வாகனங்கள் குழிக்குள் விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


ஒரு வாகன ஓட்டியின் சுருக்கமான சொற்கள்:


“சாலை அல்ல இது, சோதனைக் களம். ஒவ்வொரு மீட்டரிலும் ஒரு குழி. பைக் ஓட்டும் போது உயிர் கையில் வைத்துக் கொண்டு செல்கிறோம்.என்றார் 


சாலையை சீரமைக்க வேண்டியவர்கள்  தொடர்ந்தும் மௌனமாக இருப்பதால்  சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுப்புற பொதுமக்கள் தாங்களாகவே கற்கள், மணல் கொண்டு வந்து குழிகளை மூடினர்


எங்களைப் பாதுகாக்க அரசு இல்லை என்றால், நாங்களே நம்மை பாதுகாக்க வேண்டியது தவிர என்ன வழி? புதிய சாலை இல்லை என்றாலும் குண்டும் குழிகளை சீரமைக்கலாம் அல்லவா 


நாங்கள் இப்படி கற்களை கொண்டு சாலை சரி செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம் என்றால், அது நிர்வாகத்தின் தோல்வியாகும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்


அனைவரும் சேர்ந்து சாலை சீரமைத்த வீடியா செய்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad