நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகத் தைச் சார்ந்த ஆசிரியர் இயக்கங்களும் பங்கேற்க முடிவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகத் தைச் சார்ந்த ஆசிரியர் இயக்கங்களும் பங்கேற்க முடிவு!

நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகத் தைச் சார்ந்த ஆசிரியர் இயக்கங்களும் பங்கேற்க முடிவு!
வேலூர் , ஜூன் ‌29 -

வேலூர் மாவட்டம் பள்ளி, கல்லூரிகள் மூடலுக்கு எதிராகவும் ஒப்பந்த ஊதிய முறையை ரத்து செய்யக் கோரியும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரியும்  நாடு தழுவிய இயக்கத்தை நடத்துவது என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு நாடு தழுவிய போராட் டத்தில் தமிழகத்தைச் சார்ந்த ஆசிரியர் இயக்கங்களும் பங்கேற்க முடிவு
ஆகஸ்ட்-8 -10ல் கல்கத்தாவில் அகில இந்திய மாநாடு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) நிர்வாகிகள் கூட்டம் மற்றும் அகில இந்திய செயற்குழு கூட்டம் டெல்லி பரிதாபாத் ஆசிரியர் பவனில்
நடைபெற்றது இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக இந்தியா முழுவதும் பழைய ஓய்வதிய திட்டத்தை அமல்படுத் துதல்,NEP அபாயங்கள், அரசு பள்ளிகள், மாணவர்கள் பாதுகாப்பு சார்ந்து எதிர் கால செயல் திட்டம் வகுக்கபட்டது.
 இதுகுறித்து இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற் குழு உறுப்பினர் செ.நா. ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 
இந்தியா முழுவதும் 15லட்சம்  ஆசிரியர் களை உறுப்பினர்களாக கொண்ட  கூட்ட மைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டமானது புதுதில்லியில் அகில இந்திய தலைவர் கே.சி. ஹரி கிருஷ் ணன் தலைமையில் நடைபெற்றது.அகில இந்திய பொதுச் செயலாளர் சி.எ.ன் பார்தி செயல்பாட்டு அறிக்கையினை சமர்ப்பித்து பேசினார்.பொருளாளர் பிசி மோகன்தீ வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்து பேசினார்.  துணைப் பொதுச் செயலாளர் சுகுமார் பெயின்  முன்னிலை வகித்து பேசினர் அகில இந்திய துணைத் தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் செ.மயில் அகில இந்திய செயலாளர் மற்றும் தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.சங்கர்  அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி  ஆசிரியர் கழக மாநில தலைவர்
முனைவர் செ.நா. ஜனார்த்தனன் தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பொ. அன்பழ கன் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலை ப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில  செயல் தலைவர் அ.மாயவன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க துணை பொதுச்செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தமிழ் ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயசூரியன்  உள்ளிட்ட தமிழ்நாடு கேரளம் ஆந்திரம் தெலுங்கானா  ஹரியானா  ஒரிசா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து 19 அமைப்பு களைச் சார்ந்த நிர்வாகிகள் பேசினர். 

பின்வரும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

1.இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒன்பதாவது அகில இந்திய மாநாட்டினை வருகின்ற ஆகஸ்ட்  மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்துவது.

2. தேசிய ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ரத்து செய்து விட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்  பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த இந்திய  அரசை  கோருவது.

3.பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாத காரணத்தினால் கடந்த கல்வி ஆண்டுக்கான மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ரூபாய் 2152 கோடியை இன்னமும் வழங்காமல் இருப்பது மாணவர் கல்வி நலனில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே தமிழக மாணவர் கல்வி நலனில் அக்கறை கொண்டே இந்த நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென கோருவது 

4.இந்தியா முழுவதும் காலியாக உள்ள பல லட்சம் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக முறையான கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் 
5.தொகுப்பூதியம் மதிப்பூதியம் ஒப்பந்த ஊதியம் உள்ளிட்ட ஊதிய முறைகளை ரத்து செய்து     

ஜூலை 9ஆம் தேதி அகில இந்திய
அளவில் நடைபெறும் போராட்டத்தில்
கூட்டமைப்பில்  அமைப்புகள் முழுவது மாக பங்கெடுக்கிறது.

ஆகஸ்ட் 1 தேதி STFI கூட்டமைப்பின்கொடி தினத்தில் கொடியேற்றி நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8,9,10 கல்கத்தாவில் இந்தியா முழுவதும் 500 பிரதிநிதிகள் பங்கேற்கும் STFI அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தி, அடுத்த மூன்று ஆண்டுகளுக் கான  புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பு மற்றும் செயல் திட்டங்கள் உருவாக்கப் பட்டு நடைமுறைப்படுத்துவது என முடிவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. 
STFI அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் வேலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு.. செயற்குழு தீர்மானங்கள் சார்ந்தும், போராட்ட முடிவுகள் சார்ந்தும் உரையாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் இருந்து STFI ல் அங்கம் வைக்கும் தோழமைச் சங்க  உறுப்பினர்களான தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பில் உரையாற்றினார்கள்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad