சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு, கடந்த 45 நாட்களாக நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் காளையார்கோவில் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து சிவகங்கை நகராட்சி மற்றும் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 45 நாட்களாக குளம் போல் பெருகி வருகிறது. அந்த இடத்தில் மீன் கழிவுகள், கோழிக்கழிவுகள், ஆட்டு இறைச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் அந்த இடத்தில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு மற்றும் நோய்தொற்று ஏற்படும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க மூர்த்தி நகர் & கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக