வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமய மாக்கும் கருத்தரங்கம் விஐடி வேந்தர் பங்கேற்பு !
காட்பாடி , ஜூன் 15 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தனியார் கல்லூரி வளாகம், வேலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவி யர்களின் வெற்றிக்கான கல்வி சவால் களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைர்களுக்கான கருத்தரங்கை வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத் தில் (14.06.2025) மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து, ஒரு மதிப்பெண் வினா விடை புத்தகத்தை வெளியிட்டார்கள்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து
கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர், இதில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர் சத்திய பிரபா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக