திருப்பூரில் தெற்கு எம்எல்ஏ இல்ல திருமண நிகழ்ச்சியில் ஜீரோ வேஸ்ட் முறை செயல்படுத்தப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

திருப்பூரில் தெற்கு எம்எல்ஏ இல்ல திருமண நிகழ்ச்சியில் ஜீரோ வேஸ்ட் முறை செயல்படுத்தப்பட்டது


முதலமைச்சர் கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு எம்எல்ஏ அவர்கள் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது மாண்புமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் திமுக நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் இல்ல வரவேற்பு விழா வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் இந்த திருமண நிகழ்ச்சியில்  குவிந்த குப்பைகளை ஜீரோ வேஸ்ட் முறையில் செயல்படுத்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்களும் அவரது மகனான வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் செ. திலகராஜ் ஆகியோர் வழிகாட்டுதல் பேரில் துப்புரவாளன் அமைப்புடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து திருமண வரவேற்பு விழாவில் ஜீரோ வேஸ்ட் குப்பை என்ற முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு குப்பைகள் தரம் பிரித்து அகற்றப்பட்டது இதை கண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர் இதேபோல் நாடெங்கும் நடைபெறும் திருமண விழாக்கள் மற்றும் வரவேற்பு விழாக்களில் ஜீரோ வேஸ்ட் முறையை பின்பற்றினால் சுகாதார கேடு இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்  என்று சமூக ஆர்வலர்கள் கூறினார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad