![]() |
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணையின் நீர் மட்டம் 14.06.2025 அன்று காலை 7.00 மணியளவில் 85.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அமராவதி அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமராவதி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்துவிடப்படலாம். எனவே அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக