பள்ளி மாணவர்களுக்கு மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலை
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மழை பெய்யும் காலத்தில் மழை நீரானது பள்ளி வளாகத்திற்கு அருகில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறைக்கு செல்லும் பொழுதும் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும்போதும் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஏற்படுகிறார்கள் இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழிவகுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக